தர்மபுரி நகரில் பிரதான சாலைகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும்போது கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைவதுடன், பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் ஒரு சில பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாராமலும், மற்ற பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் முறையாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் தர்மபுரி நகரில் உள்ள பிரதான சாலைகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை உடனே தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-கந்தசாமி, காந்திநகர், தர்மபுரி.