ஈரோடு கே.கே.நகர் பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. விரைந்து குடிநீர் வினியோகிக்கவும், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.