கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-12-11 17:16 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பேவுஅள்ளி ஊராட்சி கரகூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தினந்தோறும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீட்டுக்கு முன்பாக தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் புகுவதால் அந்தபகுதி மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்