தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டு பஞ்சப்பள்ளி சாலையில் கழிவுநீர் வெளியேற்றப்படாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இதில் கொசுக்கள் உற்பத்தி ஆகி இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்ற பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-வேலன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.