திண்டுக்கல் அனுமந்தநகரில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் வழியில் உள்ள குளத்தில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குளத்தில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.