தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-16 15:43 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அறிவழகன், நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்