சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின் ரோடு தனியார் ஆஸ்பத்திரி அருகில் உள்ள வாறுகால் பாலம் சேதமடைந்து துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.