விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 12-வது வார்டு தெரு மத்தியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரத்னவேல், ஸ்ரீவில்லிபுத்தூர்.