விழுப்புரம் மாம்பழப்பட்டுரோடு அலமேலுபுரத்தில் உள்ள மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகதிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் காலம் மழைக்காலம் என்பதால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.