தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 13-வது வார்டு முகமதிர் தெருவில் சிலநாட்களாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமுவேல், மாரண்டஅள்ளி, தர்மபுரி.