தேனியை அடுத்த சருத்துப்பட்டி 9-வது வார்டு இந்திரா காலனியில் சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?