தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 17-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தரவேண்டும்.
-தம்பிதுரை, பென்னாகரம், தர்மபுரி.