தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் அந்த பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கால்வாய்களை தூர்வாரி தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவிந்த், மாரண்டஅள்ளி, தர்மபுரி.