சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-20 17:12 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- பஞ்சப்பள்ளி சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் நுழைவுவாயிலின் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால் பள்ளி மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் மாணவிகளின் நலன்கருதி புதர்களை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தம்மாள், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்