பெரம்பலூர் மாவட்டம் மாவிலிங்கை கிராமத்தில் கழிவு நீர் செல்லும் வாய்க்காலை சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.