தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் பைபாஸ் சாலையின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பைபாஸ் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் அமைத்து கழிவுநீர் தேங்காமல் வெளியேற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணி, நல்லம்பள்ளி, தர்மபுரி.