நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தொண்டிகரடு பகுதியில் இருந்து மாங்குட்டைபாளையம் செல்லும் சாலையில் உள்ள கோவில் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.