ஆத்தூர் முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் அருகில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கால்வாயும் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே புதர்களை அகற்றுவதுடன் கால்வாயையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.