திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் அஞ்சலி ரவுண்டானா அருகே சாலை ஓரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்பு பகுதிக்கு உள்ளேயும் கழிவுநீர் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.