சாலையில் ஓடும் கழிவு நீர்

Update: 2022-09-07 12:45 GMT


தஞ்சை சிவராயர் தோட்டம் 3-வது தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. வாகன ஓட்டிகள் தெருவில் சென்றால் கழிவுநீர் அருகில் உள்ள வீடுகளில் தெரித்து விடுகிறது. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிஅய்யர், சிவராயர்தோட்டம்

மேலும் செய்திகள்