சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காடு ராஜகணபதி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மழை பெய்தால் சாக்கடை கழிவு நீருடன் மழைநீர் தேங்கி தெருவில் ஆறாக ஓடுகிறது. அப்போது பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷபூச்சிகள் அதிக அளவில் தண்ணீரில் செல்கிறது. சில நேரத்தில் வீடுகளுக்குள் பூச்சிகள் சென்று விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் வீதியில் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
-மணிஷ், மணக்காடு, சேலம்.