சாலையில் ஓடும் கழிவுநீர்
திருப்பூர் 15 வேலம்பாளையம் 1-வது மண்டலத்தில் 11-வது வார்டு தியாகி குமரன் வீதிகளில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ,அரசுமேல்நிலைப்பள்ளி 2 அரசு பள்ளிகள் உள்ளது. 4 ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் படித்து வருகிறார்கள்.இந்த பள்ளிகள் முன்பு சாக்கடை நீர் செல்கிறது.இதனை மாணவர்கள் மிதித்துகொண்டே நடக்கிறார்கள். சில மாணவர்கள் காலணியில் இல்லாமல் நடக்கிறார்கள். அவர்களும் கழிவுநீரை மிதித்துக்கொண்டே நடக்கிறார்கள். அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டு வருவதில்லை. உடனடியாக நடவடிக்கை எடு்த்து தியாகி குமரன் வீதிகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து புதியதாக கழிவுநீர் கால்வாய்களை கட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கருணாகரன், 15 வேலம்பாளையம்.
9894194630