சென்னை மாதவரம் பால் கம்பெனிக்கு எதிரில் உள்ள ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இந்த கழிவுநீர் அங்கேயே தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது கடந்த 3 மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாரே செல்கிறார்கள். எனவே மாநகராட்சி இதை கவனித்து நிரந்தரமாக தீர்வு வழங்குமா?