சென்னை ஓ.எம்.ஆர் சாலை ஏ-காடூர் சிறுசேரி சிப்காட் வளைவு எதிரில் வீராணம் ஏரியிலிருந்து வரும் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இப்படி வெளியேறும் தண்ணீர் ஒரே இடத்தில் சேர்வதால் அந்த இடமே சாக்கடையாக மாறி வருகிறது. இதனால் சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே உடைந்த பைப்பை சரி செய்யவும் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தம் செய்வதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.