சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் கண்ணகி தெருவில் ஆங்காங்கே உள்ள கழிவுநீர் வடிகால்வாய்களில் சில மூடிகள் இல்லாமலும் , பாதி உடைந்த நிலையிலும் இருக்கின்றன. மேலும் சிலவற்றை அட்டையை கொண்டு தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். இதுபோன்ற திறந்த நிலையில் இருக்கும் வடிகால்வாய்களில் யாரும் தவறி விழும் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் வடிகால்வாய்களை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.