சென்னை மாதவரம் அலெக்ஸ் நகர் ஏ-காலனி பகுதியில் இருக்கும் சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது கடந்த சில நாட்களாக தொடர்வதால் கழிவுநீர் சாலை முழுவதும் வழிந்தோடுகிறது. மேலும் பொதுமக்களே கழிவு நீரை கால்வாயில் இருந்து எடுத்து விடும் அவல நிலையுள்ளது. பொது மக்களை இந்த துர்நாற்றத்தில் இருந்தும், இதனால் பரவக்கூடிய நோய் தொற்றிலியிருந்தும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.