சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள வடிகால்வாய் மூடியில்லாமல் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு குள்ளாகிறார்கள். தவறி விழவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.