சென்னை கொடுங்கையூர் சின்னான் மடம் முத்தமிழ் நகரில் இருக்கும் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குப்பைக்கழிவுகள் குவிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கால்வாய் தூர்வாரப்படுமா?