சென்னை வேப்பேரி வள்ளுவன் தெருவில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் வடிகால் அடைத்து அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளின் அருகில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.