வாலாஜாைவ அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணந்தாங்கல் கிராமத்தில் பெல்லியப்பா நகர் பகுதியில் காமராஜர் தெரு, திருவள்ளுவர் தெருவில் மழைக் காலத்தில் குட்டைபோல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தெருக்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த தெருக்களில் ஊராட்சி மூலம் பாதி தூரம் சிமெண்டு ரோடு மட்டுமே போடப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிக்கு சிமெண்டு ரோடு போட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், தென்கடப்பந்தாங்கல்.