ஆரணியை அடுத்த ராந்தம் கொரட்டூர் கிராம சாலை மண் சாலையாக இருக்கிறது. லேசான மழைப் பெய்தாலும் மழைநீர் சாலையில் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக வாகனங்களில், நடந்து செல்ல மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிச் சிறுவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை மேம்படுத்தி தரமான சாலையாக அமைக்க வேண்டும்.
-முனியப்பன், ராந்தம்கொரட்டூர்.