போளூரில் பிரசித்தி பெற்ற நரசிம்மபெருமாள் கோவில் உள்ளது. சுமார் 900 படிகள் கொண்ட மலை மீதுள்ள நரசிம்மபெருமாள் சுயம்புவாக தோன்றியவர். பக்தர்கள் சாமியை வழிபட மலைக்கு செல்ல படிகளை தான் பயன்படுத்த வேண்டும். படிகள் சேதமடைந்து உள்ளது. படிகளின் இரு பக்கமும் முள்செடிகளும், புதர்களும் வளர்ந்துள்ளன. பக்தர்கள் மலைக்கு செல்லும்போது விஷ பூச்சிகள் படிக்கட்டுகளில் நடமாடுகின்றன. இதனால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும்.
-அரசு, போளூர்.