திருக்கோவிலூர் அடுத்த காரணை- ஆயந்தூர் வரையிலான சாலை, பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.