சாலையை சீர் செய்வார்களா?

Update: 2025-10-26 17:56 GMT

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஒன்றியம் செட்டியப்பனூர் ஊராட்சி வன்னிய அடிகளார் நகர் 3-வது தெரு ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அதில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையைச் சீர் செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையைச் சீர் செய்வார்களா?

-ராஜா, செட்டியப்பனூர்.

மேலும் செய்திகள்