செய்யாறு டவுன் கீழ்ப்புதுப்பாக்கம் விரிவுப்படுத்தியில் அன்னை இந்திரா தெருவில் (மாரிமுத்து மாவுமில் அருகில்) 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். மழைக்காலத்தில் எங்கள் தெருவில் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. எங்கள் தெருவில் வசித்துவரும் வயது முதிர்ந்தவர்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து நாங்கள் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க மெயின்ரோடு பகுதியில் மழைநீர் வழிந்தோடுவதுபோல் சிமெண்டு சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், கீழ்ப்புதுப்பாக்கம்.