பள்ளம் தோண்டிய இடத்தில் தார் சாலை அமைப்பார்களா?

Update: 2025-09-28 18:05 GMT

பேரணாம்பட்டில் ஆம்பூர் சாலையில் அரசு நிதியுதவி பள்ளி எதிரில் பூங்கா வீதி தெரு சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்து ஒரு மாத காலம் ஆகியும் நெடுஞ்சாலைத்துறை இன்னும் தார்சாலை அமைக்காமல் உள்ளனர். அந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைப்பார்களா?

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்