குடியாத்தம் தாலுகா அக்ராவரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜங்காளபள்ளி கிராமத்தில் அம்மன்நகர் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக மழைக்காலங்களில் நடக்க முடியவில்லை. இரு சக்கர வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அம்மன் நகர் சாலையை தார் சாலையாக மாற்றி அமைப்பார்களா?
-வி.சம்பத், குடியாத்தம்.