கண்ணமங்கலம் வழியாக வேலூர்-திருவண்ணாமலை மெயின் ரோடு செல்கிறது. இந்தச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த சாலையில் நகருக்குள் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவே தடுப்பு வேலியோ, தடுப்புச்சுவரோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணியம், கண்ணமங்கலம்.