கே.வி.குப்பம் தாலுகா கொசவன்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாலம் பகுதியில் சாலை முறையாக அமைக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் பரவலாக ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது. அவைகள், சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதை உடனடியாக அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
-ஸ்ரீராமன், கொசவன்புதூர்.