காட்பாடியில் கழிஞ்சூர் மெயின் ரோடு உள்ளது. இந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவே மிகவும் சிரமப்படுகிறார்கள். பலமாக மழை பெய்தால் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த சாலையில் தான் ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. எனவே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்.