கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 3-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகரில் இருந்து மயானத்துக்கு செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தார் சாலை அமைத்தும், மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் ஈமச்சடங்குகள், கரும காரியங்கள் செய்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. போர்வெல் கைப்பம்பு அமைக்கவும், மயான பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சரவணன், சமூக ஆர்வலர், கீழ்பென்னாத்தூர்.