கண்ணமங்கலம்-வேலூர் செல்லும் சாலையில் கூட்ரோடில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் கடந்த 26-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடந்தபோது, சிறிய சிமெண்டு ஸ்லாப் பெயர்த்து புதிய ஜல்லி அமைத்தும் தார் சாலை போடாமல் விட்டுள்ளனர். இதனால் அந்த வழியே செல்லும் ஆம்புலன்ஸ் உள்பட இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பராமரிப்பு பணி நடந்த இடத்தில் தார் சாலை அமைத்தால் மட்டுமே வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும் என ரெயில்வே துறையினருக்கு தெரிந்ததே. ஆனால் தார் சாலை அமைக்கவில்லை என்பதால் ரெயில் தண்டவாளத்தில் பள்ளங்கள் அதிகமானது. இதனால் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த வழியே உடனடியாக தண்டவாளத்தில் ரெயில்வே துறையினர் தார் சாலை அமைப்பார்களா?.
-சுரேஷ்பாபு, கண்ணமங்கலம்.