சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-18 13:49 GMT

செங்கம் பேரூராட்சியில் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கம் பழைய பஸ் நிலையம் முதல் காய்கறி மார்க்கெட், தாலுகா அலுவலகம் அருகிலும், பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகர் சாலை சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செங்கம் பகுதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. ஏற்கனவே சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டதில் இருந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ்கண்ணா, செங்கம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது