தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக்கோடுகள் போட வேண்டும்

Update: 2025-07-27 11:10 GMT

காட்பாடி-சித்தூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. செங்குட்டை பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையை கடக்க வெள்ளைக்கோடுகள் போடப்பட்டுள்ளது. ஆனால், இதே பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி, ரேஷன் கடை, சமுதாயக்கூடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கோவில், குளம் அமைந்துள்ளன. ஆகையால் அதிக மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. விபத்து நடக்கும் பகுதியாக இருப்பதால் சாலையை கடக்கும் பகுதிகளில் வெள்ளைக்கோடுகள் போட்டு எச்சரிக்கை போர்டுகள் வைப்பார்களா?

-எம்.எஸ்.லோகேஷ்குமார், காட்பாடி.

மேலும் செய்திகள்