வாலாஜாவில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. தேர்தலின்போது அவசர தேவைக்காக ஓரிரு நாட்கள் மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டது. அதன்பிறகு மேம்பாலத்தை மூடி விட்டார்கள். இதனால் வாலாஜா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மக்கள் பயன்பாட்டுக்காக மேம்பாலத்தை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், வாலாஜா.