வாலாஜாவை அடுத்த வி.சி. மோட்டூர் நான்கு முனை சந்திப்பு ரோட்டில் சாலைகளை மறித்தவாறு லாரிகள், கிரேன்கள், பொக்லைன் எந்திரங்களைஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வளைவுகளில் வரும் வாகனங்கள் தெரிவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே இந்த வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செண்பகராமன், வாலாஜா.