வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளி அருகே அன்னை தெரசா 2-வது தெரு உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி பணியின் காரணமாக தெரு மேடு பள்ளமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழை நீரும் வடியாமல், பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். தெருவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜானகிராம், ேவலூா்