விழுப்புரம் கே.கே. நகரில் பல மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டது. ஆனால் அங்கு வேகத்தடை ஏதும் அமைக்கப்படாததால் இவ்வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.