சிதம்பரம் நான்கு முக்கிய வீதிகளில் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.