குண்டும், குழியுமான சாலை

Update: 2026-05-03 16:51 GMT

கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் முதல் நொய்யல் குறுக்கு சாலை வரையுள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து நெடுகிலும் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை வைத்து சாலையை சீரமைத்தனர். ஆனால் பழைய தார்சாலையை அகற்றாமல் அதற்கு மேலேயே கலவைகள் கொட்டி புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலை மீண்டும் பழுதடைந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழைய சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்